கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காபொல பிரதேசத்தில், லொறியொன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இவ் விபத்து, இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதி நித்திரையடைந்து டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இரண்டு வாகனங்களிலும் பயணித்த மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

