மீகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்சோபுர பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டபோது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹதலாகொல வெவ பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் மீகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

