ரயில் மோதி வேன் விபத்து – ஒருவர் காயம் !

141 0

பெலியத்தையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின ரயில், வெலிகம பெலேன ரயில் கடவையில் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ் விபத்து இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வதற்காகவே இந்த வேன் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் விபத்தின் போது வேனின் சாரதி மாத்திரமே உடன் இருந்துள்ளார்.

விபத்தின் போது ரயில் கடவையில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை மணி மற்றும் ஒளி சமிக்ஞை அமைப்பு செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து மற்றும் எச்சரிக்கை சமிக்ஞைகள் செயற்படாமை தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.