கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை

140 0

தையிட்டி விகாரை தொடர்பில், பொலிஸாரால்  மல்லாகம் நீதிமன்றத்தில் கஜேந்திரகுமார் எம்.பிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தையிட்டி விகாரையை இடிக்க அழைப்பு விடுப்பதாக, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை தாங்கி அநாமதேய பரப்புரை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது தொடர்பில் பொலிஸாரால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அநாமதேய துண்டுபிரசுரம் தொடர்பில் தனக்கு தொடர்பில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்கனவே மறுத்திருந்தும், ஸ்ரீலங்கா பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.