கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது !

105 0
மத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வியாழக்கிழமை (13) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உஹன பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவராவார்.

இந்த சுற்றிவளைப்பின் போது, ¼ ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட 426 கஞ்சா செடிகள்  மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சம்பவம் தொடர்பில் மத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.