காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் குறித்து வெளியான தகவல்

78 0

காலி சிறைச்சாலைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய  பொதிகள் வீசப்படுவது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில், சிறை வளாகத்திற்குள் கையடக்கதொலைபேசிகள், சிம் கார்டுகள் மற்றும் சிகரெட்டுகள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகள்  வீசப்படுகின்றன.

இதிலும் பெரும்பாலான பொதிகள்  காலி ரயில் நிலையத்திலிருந்து சிறை வளாகத்திற்குள் வீசப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் மாதத்திலிருந்து  தடைசெய்யப்பட்ட சுமார் 25 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.