படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாண ஊடக அமையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக நாளை மாலை 3 மணிக்கு இடம்பெறும்.

