சம்பந்தரின் சதித்திட்டத்திற்கு முதல்வர் விக்கி, அனந்தி உட்பட பலர் உடந்தை!

333 0

நாற்பது வருட அரசியல் அனுபவம் கொண்ட திரு சம்பந்தன் அவர்கள் திட்டமிட்டே காய்நகர்த்தல்களை செய்துவருவதாகவும் அதற்கு முதல்வர் விக்கி உட்பட மாகாணசபை உறுப்பினர் அனந்தி உட்பட பலர் பயன்படுத்தப்படுவதாகவும் பகிரங்கமாக குற்றசாட்டியுள்ளார்.

கொழும்பு தொலைக்காட்சி ஒன்றில் பங்குகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி தலைவர் கஜேந்திரகுமார் இதனை தெரிவித்தார்.

காலஅவகாசம் வழங்கவேண்டாம் என வடமாகாணசபை ஏகமனதாக பிரேரணை இயற்றியது. பதினொருவருக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு கடிதம் அனுப்பினார்கள். ஆனால் அவற்றை மறைத்து திரிவுபடுத்தி ஏமாற்றி அரசுக்கு காலஅவகாசம் கொடுத்தது கூட்டமைப்பின் தலைமையே எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்கு பதலளித்த மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் – தனக்கு சந்தர்ப்பத்தை தந்து தற்போது மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கு சந்தர்ப்பம் தந்தது தமிழரசுகட்சி என்பதை சுட்டிக்காட்டினார்.

அதனை நிராகரித்த கஜேந்திரகுமார் – உங்களை பயன்படுத்தி மக்களின் வாக்குகளை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் என்பதே உண்மை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழ்த்தேசிய அரசியலின் செல்நெறியில் தமிழ்மக்கள் பேரவை முனைப்பான பணியை செய்திருக்கலாம். ஆனால் அதனை அரசியல் கட்சியாக வரவிடவேண்டாம் என்ற வாக்குறுதியை முதல்வர் விக்கினேஸ்வரனிடம் சம்பந்தன் பெற்றுக்கொண்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.