கிரிமியாவை இணைத்துக் கொண்ட ரஷ்யாவின் ஆணை செல்லாதது

294 0

201607290410163535_Ukraine-at-UN-says-Putins-Crimea-decree-null-and-void_SECVPFகிரிமியாவை ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து கொள்வது தொடர்பாக அதிபர் விளாதிமிர் புடின் ஆணை செல்லாது என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.1991-ல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
உக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே இணைந்ததாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,  சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், கிரிமியாவை ரஷ்யா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து கொள்வது தொடர்பாக அதிபர் விளாதிமிர் புடின் ஆணை செல்லாது என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

கிரிமியாவை இணைத்தது தொடர்பான ரஷ்யாவின் ஆணையை தள்ளுபடி செய்வதாக உக்ரைன் நாட்டின் ஐ.நா தூதர் வோலோடைமர் யெல்சென்கோ தெரிவித்துள்ளார்.மேலும், “இந்த பத்திரிக்கை அறிக்கையை ரஷ்யா தடுத்தால், நாங்கள் ஆச்சர்யமடைய மாட்டோம். ஆனால் இது யார் யாருக்காக இருக்கிறார்கள் என்பதை இது காட்டும்” என்றார்.