தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு இரண்டு மில்லியன் டொலர் பணம் மஹிந்த!

193 0

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு இரண்டு மில்லியன் டொலர் பணம் முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்டதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் 2005ஆம் ஆண்டு பெருந்தொகை பணத்தை வழங்கிய மஹிந்தவை வாழ் நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பொரளை, கெம்பல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மே தின பேரணியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தபோது மீதொட்டமுல்ல குப்பை மேடு 15 மீற்றர் உயரத்தில் காணப்பட்டது. அது தற்போதைய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் போது 45 மீற்றராக காணப்பட்டதெனவும் பொன்சேகா கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் போது மீதொட்டமுல்ல குப்பை மேடு 3 மீற்றர் உயரம் வரை மாத்திரமே உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீதொட்டமுல்ல குப்பை மேடு முன்னாள் ஜனாதிபதியின் பாவம் எனவும், அதனை தற்போதைய அரசாங்கத்தின் மீது திணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என தான் கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.