வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிபாய்ந்த கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (25) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் இருவரும் பயிர்ச்செய்கைக்காக சென்று, காய்கறிகளை எடுத்துச் சென்றுகொண்டிருந்தபோது புலிபாய்ந்த கல் ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமல்போன இருவரையும் தேடும் நடவடிக்கைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

