தளபதி கேனல் கிட்டு உட்பட பத்து வீரவேங்கைகளின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை ( 25.01.2025) அன்று யேர்மனி டோட்முன்ட் நகரில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
நிகழ்வில் பொதுச்சுடரினை டோட்முன்ட் நகரச்செயற்பாட்டாளர் திருமதி கிருபாரதி சிவராம் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியினை மத்தியமாநிலம் 2 இன் துணைப்பொறுப்பாளர் திரு.பொ. கிருபாமூர்த்தி அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்குச் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.
அரங்க நிகழ்வுகளாக
மாவீரர் நினைவுசுமந்த பாடல்கள், எழுச்சி நடனங்கள் , கேணல் கிட்டு அவர்களின் நினைவுசுமந்த கவிதைகள் மற்றும் பேச்சுக்கள் இடம்பெற்றன. நினைவுரையை தாயகநலன் பொறுப்பாளர் திரு. இராயன் அவர்கள் நிகழ்த்தினார். நிறைவாகத் தமிழீழத் தேசியக்கொடி கையேந்தலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.
















































































































