யோசித்த ராஜபக்ஷவை மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை – அமைச்சரவை பேச்சாளர்

110 0
யோஷித்த ராஜபக்ஷவை, அவர் மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.

எவராவது சந்தேகத்திற்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சிலர் தெரிவிப்பது போல சமீபத்தைய கைதுகளுக்கு அரசியல் பழிவாங்கல் காரணமில்லை என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் எவராவது சந்தேகத்துக்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால் சிஐடியினர் அது குறித்து விசாரணை செய்வார்கள். சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். யோஷித்த மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. அவை தொடர்கின்றன. சிஐடியினரும் பொலிஸாரும் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை நீதிமன்றத்திற்கு தெரிவித்து உரிய முறையில் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.