அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக தம்பலகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கடை ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கந்தளாயிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த கார் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது காரின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் மூதாட்டி ஒருவரும் இரண்டு பெண்களும் காயமடைந்துள்ள நிலையில் தம்பலகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மூதாட்டி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதுடைய மூதாட்டி ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

