கட்டார் நாட்டிற்கான இலங்கையின் முதல் பெண் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து உரையாற்றிய தூதுவர்,
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளளார்.

கட்டார் நாட்டிற்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரொஷான் சித்தாரா கான் அசார்ட், டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.