சுற்றுலா வீசாவில் பஹரைனில் தொழில் புரிவதற்கு தடை பெப். 13 முதல் அமுலாகிறது சட்டம்

85 0

சுற்றுலா விசாக்கள் மூலம் பஹ்ரைனுக்குள் நுழைவது தடை செய்யப்படவுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 13 முதல் அமுலுக்கு வரவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இம்மாதம் 14 இல், பஹ்ரைன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதன்படி, எந்தவொரு சூழ்நிலையிலும் வெளிநாட்டவர் ஒருவர், பஹ்ரைன் சுற்றுலா விசாவை வேலைவாய்ப்பு விசாவாக மாற்ற அனுமதிக்கப்படமாட்டார்.

இதனால், பஹ்ரைனில் வேலைவாய்ப்பு என வழங்கப்படும் போலி வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்றும் வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

எக்காரணம் கொண்டும் சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி, பஹ்ரைனில் வேலைவாய்ப்புத் தேடுவதற்காக செல்ல வேண்டாமெனவும் பணியகம் கேட்டுள்ளது.