முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா 22ஆம் திகதி புதன்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மேலும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்தால் பெறப்பட்ட ரூ. 6.1 மில்லியன் ரூபாவை தேர்தலுக்கான பிரசாரங்களுக்கு தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரைத் தவிர, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக மேலும் 6 பேரை குற்றப் புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.
சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில், அவர்கள் கைது செய்யப்பட்டு 23ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

