கேப்பாபுலவில் நாளை ஒப்பாரி போராட்டம்

262 0

தொழிலாளர் தினமான நாளைய நாளை ஒப்பாரி போராட்டமாக முன்னெடுக்க போவதாக கேப்பாபுலவு போராட்டத்திலீடுபடும் மக்கள் தெரிவித்துள்ளனர்  

கேப்பாபுலவு  மக்களின் போராட்டம் இன்று 61  வது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது கடந்த மாதம் 1 ம்   திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

தம்மை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம், கவனயீர்ப்பு போராட்டங்களை கடந்த ஏழு வருடங்களாக முன்னெடுத்து வந்தபோதும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு மக்களின் போராட்டங்கள் நிறுத்தபட்டன.

இந்த நிலையில் பொதுமக்கள் தமது சொந்த காணிக்குள் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக முன்னெடுத்தனர்

இந்நிலையில் நாளைய தினம் சர்வதேச  தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் உரிமைவேண்டி போராடும் நாளில் நாம் தொழில் புரியும் இடங்களை இழந்தநிலையில் வாழ்கின்றோம் எனவே எமது சொந்தக் காணிகளை வயல் நிலங்களை கடல்வளத்தை அபகரித்து இராணுவத்தினர் முகாமிட்டுள்ள நிலையில் எமது தொழில் வாய்ப்புக்களை இழந்து  இன்று ஏழரை வருடமாக கஸ்ரப்பட்டு வருவதோடு இன்று 61 நாளாக வீதிவாழ்கையை வாழ்கின்றோம்  

இந்நிலையில் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடும் நாளான நாளை எமது தொழில் உபகரணங்களோடு வீதியில் ஒப்பாரி போராட்டமொன்றை நிகழ்த்தி எமது உரிமைகளை கோரவுள்ளோம் என மக்கள் தெரிவிக்கின்றனர்