துருக்கியில் மேலும் 4 ஆயிரம் அரச அதிகாரிகள் பதவி நீக்கம்

218 0

துருக்கிய அரசாங்கம், மேலும் சுமார் 4 ஆயிரம் அரச அதிகாரிகளை பதவியில் இருந்து விலக்கியுள்ளது.
துருக்கிய அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்த சதி திட்டத்துடன் தொடர்பு கொண்ட குற்றத்திற்காகவே இவர்கள் விலக்கப்பட்டுள்ளனர்.

பதவி விலக்கப்பட்டவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீதி அமைச்சு, அதே போன்ற எண்ணிக்கையை கொண்ட இராணுவம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வாநூர்தி படையை சேர்ந்த 100 விமானிகளும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை 9 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு துருக்கிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், விக்கிபீடியா நேரலையை துருக்கிய அரசாங்கம் நேற்று முடக்கியுள்ளது.

துருக்கிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிக்கையில், பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர்கள் தோல்வியடைந்த கடந்த ஜூலை மாத சதிதிட்டத்தில் பங்குகொண்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.