வாகனத்தை செலுத்திவந்தவர் உயிரிழந்துள்ளார் பலர் காயமடைந்துள்ளனர்.

கொலராடோவில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனம் வெடிவிபத்து இடம்பெறுவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னர் லாஸ்வெகாஸிற்குள் நுழைந்துள்ளது.
டிரம்பின் ஹோட்டலின் முன்னாள் நிறுத்தப்பட்ட வாகனத்திலிருந்து புகைவெளியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனம் ஹோட்டலின் முன்வாயிலில் நிறுத்தப்பட்டிருப்பதையும் வெடிப்பதற்கு முன்னர் ஒரு பக்கமாக சரிவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அந்த வாகனம் வெடித்துசிதறும்போது அதிலிருந்து வாணவேடிக்கைகள் பல திசைகளிற்கும் செல்வதை காணமுடிகின்றது.
வாகன வெடிப்பை தொடர்ந்து பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் முற்றாக எரியுண்ட வாகனத்தையும் காணமுடிகின்றது.
இதேவேளை இந்த சம்பவம் நியுஓர்லியன்சில் நபர் ஒருவர் பொதுமக்கள் மீது வாகனத்தால் மோதிய சம்பவத்துடன் தொடர்புடைய சம்பவமா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதியும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.

