இன்று காலை நியுஓர்லியன்சின் போர்போனில் நபர் ஒருவர் காரை பொதுமக்கள் மீது வேகமாக மோதியதில் பலர் கொல்லபட்டுள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.
அந்த நபர் தற்போது உயிரிழந்துள்ளார்,எவ்பிஐ தற்போது விசாரணைகளை முன்னெடுக்கின்றது இது பயங்கரவாதம் என்ற அடிப்படையில் எங்கள் சகாக்களுடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றோம் என எவ்பிஐ தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

