கல்கிசையில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

113 0

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்திட்டிய பகுதியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 34 வயது நபர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 101 கிராம் 380 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கல்கிசை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.