உழவு இயந்திரத்தில் மோதுண்டு கால்நடை பண்ணை ஊழியர் பலி

114 0
நுவரெலியா – பட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை (14) அம்பேவெல கால்நடை பண்ணை ஊழியர் ஒருவர் கால்நடைகளுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்தபோது, உழவு இயந்திரத்தில் மோதுண்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கியவர் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சிறிசமங்கம, அம்பேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பண்ணைப் பரிசோதகர் ஆவார்.

சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பட்டிபொல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.