சில பட்டங்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்ற இணையதளத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களின் தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து புதுப்பிக்கும் செயல்முறை நடந்து வருகிறது.
இணையத்தில் தகவல்களைப் புதுப்பிக்கும் பொறுப்பில் உள்ளவர்களிடம் விளக்கம் கேட்கவும் பாராளுமன்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதேவேளை, பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் கோப்பகத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற தலைப்பு குறிப்பிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்திற்கு வழங்கிய தகவல்களில் ஹர்ஷன நாணயக்கார கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

