சபாநாயகர் பதவிக்கு எம்.பியை முன்மொழியவுள்ள எதிர்க்கட்சி

89 0

கடந்த வாரம் தனது பதவியை இராஜினாமா செய்த அசோக ரன்வலவையடுத்து செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சி முன்மொழியவுள்ளது.

“எமது வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் வேட்பாளர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் சூழ்நிலையை மக்களுக்கு உருவாக்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

நவம்பர் 21 அன்று நாங்கள் பதவிக்கு போட்டியிட்டிருந்தால் போலியாக கலாநிதி பட்டம் பெற்ற ரன்வலவை விட எதிர்க்கட்சி வேட்பாளர் சிறந்தவர் என்று மக்கள் கூறியிருப்பார்கள்” என SJB பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹா ஊடகங்களுக்கு தெரிவித்தார்