இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் பலி: ஐவருக்கு காயம்

81 0

இரண்டு லொறிகள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு அனுராதபுரம் ஏ28 பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பண்டாரகமவில் இருந்து அனுராதபுரம் நோக்கி மாம்பழம் ஏற்றிச்செல்ல வந்த சிறிய லொறியும், அநுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கி வீதிகளின் ஓரங்களில் பதிக்கும் (இன்டர்லாக் கற்களை) ஏற்றிச் சென்ற பெரிய லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சிறிய ரக லொறியின் சாரதியின் நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.