வடகொரியா விவகாரம் – சீனாவின் ஜனாதிபதிக்கு ட்ரம்ப் பாராட்டு

217 0

வடகொரியா விவகாரத்தை சீனாவின் ஜனாதிபதி கையாளும் முறைமையை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

அதேநேரம் வடகொரியாவின் விடயத்தை ராஜதந்திர ரீதியாகவே தீர்த்துக் கொள்ள தாம் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தோல்வி அடையும் பாட்சத்தில் மிகப்பாரிய மோதல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் மிகச்சிறிய வயதுடைய கிம் ஜொங் யுன்னினால் வடகொரியாவினை முன்நகர்த்திச் செல்ல முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இன்றைய தினம் பாதுகாப்பு சபையில் வடகொரியா குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது.