யால வனப்பகுதியில் கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

118 0

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யால வனப்பகுதியில் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  எம்பிலிப்பிட்டிய, துன்கம பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடையவர் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 92,500 கஞ்சா செடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.