துருக்கியில் ஊடகங்கள் மூடப்படுகின்றன

299 0

90415800_turkeyநூற்றுக் கணக்கான துருக்கி ஊடகங்கள் மூடப்படவுள்ளன.

இதற்கான உத்தரவை அரசாங்கம் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ம் திகதி அங்கு இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு ஆதரவளித்ததாக தெரிவித்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 3 பிரதான ஊடக முகவர்நிலையங்களும், 16 தொலைகாட்சி நிலையங்கள், 45 பத்திரிகைகள் மற்றும் 15 சஞ்சிகைள் என்பன மூடப்படவுள்ளன.

இதற்கிடையில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 700க்குமு; அதிகமான படையினர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஜெனரல் மற்றும் அட்மிரல் தரங்களில் உள்ள 149 பேரும் உள்ளடங்குகின்றனர்.

அமெரிக்காவில் வசிக்கும் மதத்தலைவரான பதுல்லா குலன் என்பவரே இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக துருக்கி அரசாங்கம் குற்றம் சுமத்துகிறது.

இந்த முயற்சியின் போது 246 பேர் பலியானதுடன், 2000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

எனினும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.