குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்களைச் சூட்டத் தடை!

219 0

முஸ்லிம் மக்களை அதிருப்தியடையச் செய்யும் வகையில் புதிய சட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது சீன அரசு. அதில், குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர் வைப்பதற்கும் தடை விதிக்கும் சட்டமும் ஒன்று!

சீனாவின் தன்னாட்சி மானிலமாக விளங்குவது ஷிங்ஜியாங். இந்த மானிலத்தின் சட்ட சபை உறுப்பினர்கள் பல்வேறு சட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்கள் பலவும் புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் முகத்தை மூடும் வகையில் பெண்கள் ஆடை அணிவதற்குத் தடை விதித்தும், அவ்வாறு ஆடையணிபவர்கள் குறித்து பொலிஸாருக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அத்துடன், சமயத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தாடி வளர்க்கக் கூடாது என்றும், குழந்தைகளுக்கு முஸ்லிம் பெயர்களைச் சூட்டக்கூடாது என்றும் ஷிங்ஜியாங்கில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் இது போன்ற சட்டங்கள் ஷிங்ஜியாங் மானிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே வழக்கத்தில் இருந்தபோதும், தற்போது ஷிங்ஜியாங் மானிலம் முழுவதும் இச்சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.