வடமாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 410 பேருக்கு 6.5 மில்லியன் பெறுமதியான விவசாய உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது
முல்லைத்தீவு கணுக்கேணி போதுநோக்குமண்டடபத்தில் இன்று காலை 9.மணிக்கு பிரதி மாகான விவசாய பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகான விவசாய அமைச்சர் பொ.ஜ்ங்கரநேசன் மற்றும் மாகான சபை உறுப்பினர்களான து ரவிகரன் ஆ புவனேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு உள்ளீடுகளை வளன்கிவைத்தனர்
இந்த அடிப்படியில் தரமான விதைநெல் உற்பத்திக்கென எழுபது பயனாளிகளுக்கு 1.5 மில்லியன் பெறுமதியான உள்ளீடுகளும் நெற்செய்கையில் உற்பத்தி திறனை அதிகரித்தலுக்கென 90 பயனாளிகளுக்கு 2.0 மில்லியன் பெறுமதியான உள்ளீடுகளும்வயல் நிலங்களில் மருவயல் பயிர்ச்செய்கையை ஊக்குவித்தளுக்கென 125 பயனாளிகளுக்கு 1.5 மில்லியன் பெறுமதியான உள்ளீடுகளும் நிலக்கடலை செய்கையில் உற்பத்தி திறனை அதிகரித்தளுக்கென 50 பயனாளிகளுக்கு 1.0 மில்லியன் பெறுமதியான உள்ளீடுகளும் பழப் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தளுக்கென 75 பயனாளிகளுக்கு 0.5 மில்லியன் பெறுமதியான உள்ளீடுகளுமாக மொத்தமாக 410 பயனாளிகளுக்கு 6.5 மில்லியன் பெறுமதியான உள்ளீடுகள் வழங்கப்பட்டன.

