வவுனியா – செட்டிக்குளம் பிரதேசத்தில் நேற்று இரவு வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியது.
எரிவாயு கசிவு ஒன்றினால் தீ பரவியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் அறியவந்துள்ளது.
காவற்துறை மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயணைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
தீ பரவலினால் எந்த ஓர் நபருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

