வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டத்திற்கு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
நீண்ட காலத்திற்கு பின்னர் வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், மற்றும் முதலைமைச்சர் சார்பில் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெற்றது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மட்டத்தில் உள்ள அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களுக்கு தமது பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாட அனுமதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை. அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மட்டும் கதைக்கும் கூட்டமாக அது அமைந்திருக்கின்றது. மீள்குடியேற்றப் பகுதிகளை அதிகம் கொண்ட இப்பகுதி மக்கள், தமது பிரச்சனைகள் குறித்து கதைக்க முடியாதவிடத்து இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளனர்.

