மீள்குடியேற்ற செயலணிக்கு வடக்கு மாகாண முதலமைச்சரை புறக்கணித்த றிசாட்

307 0

maxresdefault-2-e1469602226295வடக்கின் மீள் குடியேற்ற செயலணிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பெயரைப் பரிந்துரை செய்யுமாறு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பரிந்துரையை அமைச்சர் றிசாட் பதியுதீன் புறக்கணித்துள்ளதாக சில அரசியல் வட்டாங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

வடக்கு மாகாண மீள்குடியேற்ற செயலணி அமைக்கும் பத்திரமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதன்போது இந்தச் செயலணியில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனையும் இணைத்துக்கொள்ளவேண்டுமென அதிபர் மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்ததாகவும், அதனைப் புறக்கணித்தே அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீள் குடியேற்ற செயலணியில் அங்கம் வகிக்கக்கூடாது என்பதில் அமைச்சர் றிசாட் பதியுதீன் மும்முரமாகச் செயற்பட்டதாகவும் தெரியவருகிறது. வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் றிசாட் பதியுதீன் பல கருத்து மோதல்களில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், வடக்கு மாகாண மீள் குடியேற்றத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவரையும் இணைத்துக்கொள்ளாதது பல விமர்சனங்களையும் தோற்றுவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தச் செயலணிக்கு எதிராக வடமாகாண சபையில் பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.