அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா சென்றது

565 0

அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவைச் சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில், வடகொரியா மற்றுமொரு அணுவாயுத சோதனையை நடத்த தயாராக இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் நீடிக்கும் மத்தியில் அமெரிக்கா தமது நீர்மூழ்கி கப்பலை தென்கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

தமது மக்கள் இராணுவம் உருவாக்கப்பட்டு 85 ஆண்டுகள் நிறைவடையும் தினத்தை எதிர்வரும் வியாழக்கிழமை வடகொரியா அனுஸ்ட்டிக்கவுள்ளது.

இந்த நிலையிலேயே வடகொரியா குறித்த அச்சமும் மேலோங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.