முள்ளிக்குளம் காணிகளை விடுவிப்பது குறித்து இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை

420 0

முள்ளிக்குளம் காணிகளை விடுவிப்பது குறித்து இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக கடற்படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.

குறித்த காணிகளை விடுவிப்பதற்கான நிதியை வழங்க மீள்குடியேற்ற அமைச்சு உறுதியளித்துள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு கிடைத்ததும், கேப்பாபுலவில் உள்ள 189 ஏக்கர் காணிகள் 6 வாரங்களில் விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டமானாறு முதல் காங்கேசன்துறை வரையான வீதியை விரைவில் திறக்க இராணுவத் தளபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், மயிலிட்டியில் உள்ள குறிப்பிட்ட சில காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இதேவேளை, பண்ணைக் காணிகளில் பணியாற்றுகின்ற 11 ஆயிரம் பேருக்கு வேதனம் வழங்க தயார் என்றால், குறித்த காணிகளை மாகாண சபைகளுக்கு வழங்கத் தயார் என்று பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார்.