70 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 708 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து இன்று அதிகாலை 12.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர் கட்டுநாயக்க பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய குறித்த சந்தேகநபர் அந்த நாட்டில் சாரதியாக பணியாற்றக் கூடியவர் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளதுன் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

