சிலாபம் – பங்கதெனிய பகுதியில் பஸ் ஒன்றிற்கு கல் வீசியதாக கூறப்படும் மூவரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 01.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தாக்குதலில் குறித்த பஸ்ஸின் நடத்துனர் காயமடைந்த நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியோரத்தில் இருந்த மூவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பாதிக்கப்பட்ட பஸ்ஸின் சாரதி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

