எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம் நிறைவு – போராட்ட காலத்தில் கிளிநொச்சியில் ஒரு லீற்றர் பெற்றோல் 300 ரூபா

386 0

எரிபொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், கிளிநொச்சியில் ஒரு லீற்றர் பெற்றோல் 200 முதல் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை எண்ணெய்க் கிடங்குகளை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை எரிபொருள் கூட்டுத்தான ஊழியர்கள் நேற்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் குறித்த பணிப் புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

எவ்வாறிருப்பினும், குறித்த பணிப் புறக்கணிப்பின் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில், கிளிநொச்சியில் உள்ள சில பெட்டிக்கடைகளில் ஒரு லீற்றர் பெற்றோல் 200 ரூபாய் முதல் 300 ரூபா விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பெற்றோலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.