முல்லைத்தீவில் கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கான இடம்தொடர்பிலான வழக்கு மே நான்காம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை விடுவிதற்குரிய இடம் (பாடுகள்) கரைதுரைப்பற்று பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பிரதேசத்தில் தமிழ் மீனவர்கள் வாடியமைத்தபோது ஏற்ப்பட்ட முறுகல் நிலையை தொடர்ந்து கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களத்தால் கடந்த வருடம் ஜுலை மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மூன்றாம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட நிலையில், குறித்த பிரச்சினைக்கயுரிய பகுதியை அளவீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதுவரை தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது
இந்நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிபதி எஸ் எம் எஸ் சம்சுதீன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைகளின் பின்னர் வழக்கு மே நான்காம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

