ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தற்போது நிலவும் தொகுதி அமைப்பாளர் வெற்றிடங்களுக்காக நாளைய தினத்திலும் மேலும் சிலர் நியமிக்கப்படவுள்ளனர்.
கொழும்பில் இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டதாக அவர் இதன் போது தெரிவித்தார்.

