கட்சிகளை பதிவு செய்யும் நேர்முகப் பரீட்சை இவ்வாரம் நிறைவு

350 0

அரசியல் கட்சிகளை புதிதாக பதிவு செய்யும் நேர்முகப் பரீட்சைகள் இந்தவாரத்தினுள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இதுபற்று கூறுகையில், கடந்த காலங்களில் 95 புதிய அரசியல் கட்சிகள் விண்ணப்பங்களை ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

குறித்த விண்ணப்பங்களுக்கு ஏற்ப கடந்த வாரத்தினுள் நேர்முகப் பரீட்சைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில், குறித்த விண்ணப்பதாரிகளால் வழங்கப்பட்ட வாய்மூல கருத்துகளுக்கு அமைய எழுத்துமூல தேர்வுகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தரப்பினருக்கு மேன்முறையீடுகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன் அது தொடர்பாக அவதானத்துடன் செயற்படுவதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் மாதயிறுதியளவில் குறித்த புதிய கட்சிகளையும் தேர்தல்கள் ஆணையகத்தில் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தநிலையில், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 64 அரசியல்கள் தேர்தல்கள் ஆணையகத்தில் பதிவு செய்துள்ளன.