இந்தியாவும் சீனாவும், இலங்கையில் பொருளாதார வலயங்களை நிறுவ உள்ளன.

298 0

India_geo_stub.svg_இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இலங்கையில் சிறப்பு பொருளாதர வலையங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.

இலங்கையின் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்தியவர்கள் மருத்துவ பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாக கைத்தொழில் என்பவற்றிட்காக பொருளாதார வலயம் ஒன்றை அமைக்கவுள்ளது.

சீனா ஹம்பாந்தோட்டையில் பொருளாதார வலயம் ஒன்றை அமைப்பதற்காக 15 ஏக்கர் காணியினை கோரியுள்ளாகவும்  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றின் மூலம் இலங்கையர்கள் மத்தியில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வலயத்திற்கான துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அதற்கான இடம் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இந்திய குழுவினர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர்.

சீன அதிகாரிகளும் விரையில் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனடிப்படையில் சீன இலங்கை பொருளாதார உடன்படிக்கை 2017ஆம் ஆண்டு கையெழுத்திடப்படும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டார்.

இதனை தவிரவும் சிங்கபூருடனும் இலங்கை பொருளாதார உடன்படிக்கை செய்து கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் எட்கா உடன்படிக்கை மூலம் இந்திய சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இலங்கையில் தொழில்களில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அதனால் இலங்கையர்களின் தொழில்கள் இழக்கப்படும் என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.