யாழ்ப்பாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 700 குடும்பங்களுக்கு, இலங்கையில் உள்ள துருக்கி நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தால் உதவித் திட்டங்கள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.
உதவித் திட்டங்களை சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் பொதுமக்களிடம் கையளித்தார்.
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் உள்ள துருக்கி நாட்டு உயர்ஸ்தானிகராலயம் உதவிப்பொருட்களை வழங்கியிருந்தது.
உதவிப்பொருட்கள் யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முஸ்லீம் மக்கள் மற்றும் உடுவில் பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட சுன்னாகம், மயிலங்காடு பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
நுளம்பு வலை, கட்டிலுக்குரிய மெத்தை, பாய், பேரீச்சம்பழம் இலையான் கொல்லும் கருவி போன்ற உதவி பொருட்களே பொதுமக்களுக்கு வழங்கி வைக்கி வைக்கப்பட்டுள்ளன.

