மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு, ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் (காணொளி)

320 0

அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிறுவனமும், அவுஸ்ரேலிய ரொட்டறிக் கழகமும் இணைந்து மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ஒரு தொகை மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளன.

அவுஸ்ரேலிய ரொட்டறிக் கழகத்தின் சர்வதேச மனிதாபிமான செயற்பாட்டின் ஒரு அங்கமாக, மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை வைத்தியசாலையில் நடைபெற்றது.

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியக் கலாநிதி செபரத்தினம் பிரான்சிஸ் அல்மேடா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் ரொட்டறிக் கழக ஆளுனர் நடராஜன் நாகோஜி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், அக்கழகத்தின் முன்னாள் ஆளுனர் ஏ.சம்பத்குமார் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதற்கமைய, ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு பிரேத குளிரூட்டி, வைத்தியக் கழிவுகளை அகற்றும் கருவிகள், உடற் பரிசோதனை ஸ்கான் இயந்திரம், இருதய பரிசோதனை செயற்பாட்டு இயந்திரங்கள் உட்பட பல்வேறு சிகிச்சை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் தொலைதூரங்களுக்கு சிகிச்சைக்குச் செல்வோர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.