கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசம் 1515 ஏக்கர் நிலம்

281 0
கிளிநொச்சி மாவட்;டத்தில்  நான்கு பிரதேச செயலக பிரிவுகளில் படையினரி;ன் வசம் 1515.7 ஏக்கர் நிலம்  காணப்படுவதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்மையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கூட்டத்தின் போதே இத் தகவல்கள் வெளியிடப்பட்டன.
அதனடிப்படையில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 374 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 168. 2 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 973. 5 ஏக்கர் காணியும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.
கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 667 ஏக்கர் காணியும், கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 185 ஏக்கர் காணியும், பூநகரியில் 592.7 ஏக்கர் காணியும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 71 ஏக்கர் காணியும் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.
இதில் கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 218 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 4 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 445 ஏக்கர் காணியும்
கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 128 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 8 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 49 ஏக்கர் காணியும்
பூநகரி பிரதேச செயலக பிரிவில் தனியார் காணி அனுமதி பத்திர காணிகள் 28 ஏக்கரும், தனியார் உறுதிக்காணிகள் 85.7 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 479 ஏக்கர் காணியும்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தனியார் உறுதிக்காணிகள் 70.5 ஏக்கரும், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் 0.5 ஏக்கர் காணியும் என காணப்படுகின்றன.