தமிழக அரசியல் சூழல் தொலைக்காட்சி தொடர் போல் உள்ளது: கனிமொழி

224 0

தமிழக அரசியல் சூழல் தொலைக்காட்சி தொடர் போல் உள்ளது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசியல் சூழல் தொலைக்காட்சி தொடர் போல் உள்ளது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ”எதிரிகளே இல்லாத சூழலில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலின் முதல்வராகும் காலம் விரைவில் வரும். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.

இதனிடையே தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த தேசிய மகளிர் காங்கிரஸ் பொருளாளர் நக்மா தமிழக அரசியல் நிலவர பின்னணியில் பாஜக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.