பாத யாத்திரையில் சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் கலந்துகொள்ளக்கூடாது

338 0

Mahinda-Samarasingheஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் பாத­யாத்­தி­ரையில் கலந்­து­கொள்­ளக்­கூ­டாது என ஜனா­தி­பதி உறு­தி­யாக தெரி­வித்­துள்­ள­தா­கவும், கட்­சியை பிள­வு­ப­டுத்­தவோ அல்­லது நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவோ ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் செயற்­ப­டக்­கூ­டாது என்­பதே அவரின் நிலைப்­பாடு எனவும்அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் உறவை தொடர அடுத்த மூன்று ஆண்­டு­கா­லத்­திற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை நீடிக்க வேண்டும். தேசிய அர­சாங்­கத்தை இரண்டு ஆண்­டு­க­ளுடன் கலைப்­பது நாட்டின் நிலை­மை­களை குழப்பும் செய­லாகும். எனவே ஐந்து ஆண்­டு­க­ளுக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை நீடிப்­பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆராயும் என என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­த­போது ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கை­களை நீட்­டிக்­குமா என வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பொது எதி­ர­ணி­யினர் முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக கூறப்­படும் பாத­யாத்­தி­ரையை முன்­னெ­டுப்­ப­தற்கு ஜனா­தி­பதி பூரண அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­யுள்­ள­தாக நேற்று(நேற்று முன்­தினம்) ஜனா­தி­ப­தி­யுடன் நடை­பெற்ற பொது எதி­ர­ணி­யி­னரின் சந்­திப்பின் பின்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பிர­சன்ன ரண­துங்க ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார்.

ஆனால் இந்த கருத்து முற்­றிலும் பொய்­யான ஒரு கருத்­தாகும். ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் இந்த பாத­யாத்­தி­ரையில் கலந்­து­கொள்­ளக்­கூ­டாது என உறு­தி­யாக தெரி­வித்­துள்­ள­தா­கவும், கட்­சியை பிள­வு­ப­டுத்­தவோ அல்­லது நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவோ ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் செயற்­ப­டக்­கூ­டாது எனவும் அமைச்­ச­ரைவை கூட்­டத்­துக்கு முன்­ன­தாக குறிப்­பிட்டார்.

தேசிய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக இடம்­பெறும் சதி­களை தன்னால் அனு­ம­திக்க முடி­யாது எனவும் ஜனா­தி­பதி கூறி­யுள்ளார். பொது எதி­ர­ணியின் பாத­யாத்­தி­ரையில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் கலந்­து­கொள்ள ஜனா­தி­பதி அனு­மதி வழங்­கி­யுள்ளார் என இவர்கள் தெரி­விக்­கின்­றனர். ஆனால் ஜனா­தி­பதி எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அதற்­கான அனு­ம­தியை வழங்­க­வில்லை.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­னர்கள் எவரும் பொது எதி­ர­ணியின் பாத­யாத்­தி­ரையில் கலந்­து­கொள்ள முடி­யாது. ஆனால் இன்று ஊட­கங்­களும், பொது எதி­ர­ணி­யி­னரும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் யார் கலந்­து­கொள்­வார்கள் எனவும், அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா எனவும் கேள்வி எழுப்பி வரு­கின்­றனர். ஆனால் பொது எதி­ர­ணியின் பாத­யாத்­திரை முதலில் நடை­பெ­று­கின்­றதா என்­பதை பார்த்­து­விட்டு அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் என்­ன­வென பார்க்­கலாம்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கு எதி­ராக இந்த செயற்­பா­டுகள் அமை­யா­விட்­டாலும் நாம் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்து செல்­கின்றோம். அவ்­வாறு இருக்­கையில் அர­சாங்­கத்தை குழப்­பு­வது நாட்டில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டாகும். அதேபோல் இப்­போது நாம் இரண்டு ஆண்­டு­க­ளுக்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை மேற்­கொண்டு அதன் அடிப்­ப­டையில் செயற்­பட்டு வரு­கின்றோம்.

பிர­தான இரண்டு கட்­சி­க­ளுக்கும் மக்கள் முழு­மை­யான ஆத­ரவை வழங்­காத நிலையில் இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து இந்த தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்றோம். ஆகவே புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை என்­பது மிகவும் அவ­சி­ய­மான ஒன்­றாகும். அவ்­வாறு இருக்­கையில் இப்­போது தேசிய அர­சாங்க ஆட்­சியின் இரண்டு ஆண்­டுக்­காலம் நிறை­வ­டையும் நிலையில் அடுத்த மூன்று ஆண்­டு­கா­லத்­திற்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை நீடித்து ஐந்து ஆண்­டு­க­ளுக்­கான தேசிய அர­சாங்­கத்தை முன்­னெ­டுக்க வேண்டும். தேசிய அர­சாங்­கமே இப்­போது நாடு இருக்கும் நிலையில் நாட்டை முன்­னெ­டுக்க சிறந்த தெரி­வாக உள்­ளது.

எவ்­வாறு இருப்­பினும் தேசிய அரசாங்கமாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னோக்கி செல்வதா அல்லது இரண்டு ஆண்டுகளின் பின்னர் தனித்து செல்வதா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு கூடி ஆராயும். எவ்வாறு இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த இயலாது. அதேபோல் பாரளுமன்றத்தை கலைக்கவும் முடியாது. அவ்வாறு இருக்கையில் தேசிய அரசாங்கமாக செயற்படுவதே ஒரே தீர்வாக உள்ளது. அது தொடர்பில் சிந்திக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.