ஜனாதிபதியின் வர்த்தமானி மனித உரிமை மீறலாகும்-நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

250 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலானது மனித உரிமை மீறல் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகளை அகற்றுதல் அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களை பிடிவிராந்து இன்றி கைது செய்யும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் அமைதியாக ஒன்று கூடுதல் கருத்து வெளியிடுதல் உள்ளிட்ட சுதந்திரத்தை இந்த வர்த்தமானி அறிவித்தல் தடுப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இயற்கை வளங்களை பாதுகாத்தல் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பொதுமகன் ஒருவரின் கடமையாகும் எனவும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது