மன்னாரில் 3 இலட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் காணி வனவள திணைக்களத்திடம்

260 0
4 லட்சத்து 94 ஆயிரத்து 494 ஏக்கர் அளவை  கொண்ட மன்னார் 3 லட்சத்து 70 ஆயிரம் காணிமாவட்டத்தினில் வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பிடியில் 3 லட்சத்து 70 ஆயிரத்து 822 ஏக்கர் நிலம் உள்ளதாக திணைக்களங்களின் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டமானது மொத்தமாகவே 2002 சதுரக்கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்ட ஓர் மாவட்டம். ஓர் சதுரக் கிலோ மீற்றர் என்பது 247 ஏக்கர் என்பதன் அடிப்படையில் மாவட்டமே மொத்தமாக 4 லட்சத்து 94 ஆயிரத்து 494 ஏக்கர் அளவை  கொண்டுள்ளது. இந்த அளவினையுடைய  மன்னார் மாவட்டத்தினில் வனவளத் திணைக்களத்தின் ஆளுகையில் மட்டும் 3 லட்சத்து 3 ஆயிரத்து 822 ஏக்கர் வனப்பகுதி உள்ளதாக குறித்த திணைக்களம் உறுதி செய்கின்றது.
இதேபோன்று வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் 67 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளதாக குறித்த திணைக்களம் உரிமை கோருகின்றது. இவை இரண்டு திணைக்களத்தின் கீழ் மொத்தமாக 3 லட்சத்து 70 ஆயிரத்து 822 ஏக்கர் நிலம் உள்ளதாக திணைக்களங்களின் தரவுகளின் பிரகாரம் உரிமைகோரும் நிலையில் மாவட்டத்தில் வாழும் மக்களின் வாழ்விடங்கள் , தொழில் மையங்கள் , பொருளாதார நிலையங்கள் , வயல்கள்  என உள்ள அரச , தனியார் நிலங்களென அனைத்தும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 672 ஏக்கர் நிலத்திற்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்டத்தின் மொத்த நிலத்தின் நான்கில் மூன்று பங்கு நிலங்கள் இரு திணைக்களத்திடம் மட்டுமே உள்ளதனாலேயே பாரிய அபிவிருத்தித் திட்டங்களோ அல்லது மக்கள் நலன் சார் திட்டங்களையோ முன்னெடுக்க முடியவில்லை. எனக் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்தும் குற்றம் சாட்டிய நிலையில் குறித்த இரு திணைக்களங்களின் தகவலின் அடிப்படையில் மேற்படி குற்றச் சாட்டும் நிரூபனமாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது